"கருத்தடை செய்வதன் மூலம் யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்"

கோவை : கருத்தடை செய்வதன் மூலம் யானைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, மனித - யானை மோதல்கள் தடுக்க முடியும் என இந்திய வனஉயிரின கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை : கருத்தடை செய்வதன் மூலம் யானைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, மனித - யானை மோதல்கள் தடுக்க முடியும் என இந்திய வனஉயிரின கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

கோவையில் நடைபெற்று வரும் மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்த தேசிய மாநாட்டில் இந்திய வனஉயிரின கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் கலந்து கொண்டார். அப்போது, கோவையில் தற்போது அதிகரித்து வரும் மனித - யானை மோதல் சம்பவங்களை தடுப்பது குறித்து அவர் பல்வேறு யோசனைகளை தெரிவித்தார். 

அவர் கூறியதாவது :- ஆப்ரிக்கா நாடுகளில் பெண் யானைகளுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. இதனால், கருத்தடை செய்யும் யானைகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு கருத்தரிக்காது. இந்த திட்டத்தை இந்தியாவிலும் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இதன் மூலம், யானைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காட்டு யானை தாக்கிய உயிரிழக்கின்றனர். ஆனால், பிற நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 

 

உண்ணிச்செடி எனப்படும் லந்தனா காமரா போன்ற 10 அடி உயரம் கொண்ட தாவரங்கள் முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வளருகின்றன. இச்செடிகள் மண்டியிருக்கும் சில இடங்களில் யானைக் கூட்டங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து, தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதால், அவை வனங்களை விட்டு வெளியேறுகின்றன.

மேலும், கல்லாறு, ஆரியங்காவு, முக்கூர்த்தி ஆகிய யானைகள் வழித்தடத்தை பாதுகாப்பதன் மூலம், மனித - யானை மோதல்கள் பெரிதளவு தடுக்க முடியும், இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...